பொருளாதாரம்

img

10 கோடி பேரின் கிரெடிட் கார்டு விவரங்களை திருடிய பெண்

வாஷிங்டன், ஜூலை 30-  அமெரிக்காவில் 10 கோடி பேரின் கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்களை பென் பொறியாளர் ஒருவர் திருடியுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாநி லத்தைச் சேர்ந்த பெண் பெய்ஜ் தாம்சன் (33). சாப்ட்வேர் இன்ஜீனியரான இவர் தனது கணினி திறமையை பயன்படுத்தி, கேபிடல் ஒன் வங்கியின் வாடிக்கையா ளர்களான சுமார் 10 கோடி பேரின் கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்களை திருடி யுள்ளார். இதுகுறித்து சமூகவலைத்தளத்திலும், கிட் கியூப் ( GitHub) என்ற இணைய தளத்திலும் தற்பெருமை அடித்துள்ளார். இதை கவனித்த இணையதள பயனாளர் ஒருவர், கேபிடல் ஒன் வங்கிக்கு தகவல் அளித்துள்ளார். வங்கியும் கிரெடிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டதை அறிந்து புகார் அளித்துள்ளது. இதன் அடிப்படையில் தகவல் திருட்டில் ஈடுபட்ட பெய்ஜ் தாம்சனை கைது செய்த எப்பிஐ அதிகாரிகள், திருடி வைத்தி ருந்த விவரங்களையும் மீட்டுள்ளனர். கிரெ டிட் கார்டு கணக்கு விவரங்களையோ அதற்கான பாஸ்வேர்டுகளையோ பெய்ஜ் தாம்சன் திருடவில்லை. திருடிய விவ ரங்களை பயன்படுத்தி நிதிமோசடியில் ஈடு படவில்லை.  ஆனால்  தகவல் திருட்டுக்காக அவ ருக்கு 5 ஆண்டுவரை சிறைத் தண்டனையும், 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

;