பொருளாதாரம்

img

வரலாறு படைத்தது கர்நாடகா ஐ.டி. தொழிற்சங்கம்

பழிவாங்கல்கள் ரத்து; ஊதிய உயர்வு- போனஸ் வழங்க ஒப்புதல்

பெங்களுரு, அக்.6- எம்பிஎஸ் ஊழியர்கள் மீதான பழிவாங்கல் கள் ரத்து செய்யப்பட்டு ஊதிய உயர்வு மற்றும் போனஸ் 18 மாதம் பின்தேதியிட்டு வழங்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக தகவல் தொழில்நுட்ப ஊழியர் சங்கம் (கேஐடியு) இதன் மூலம் வலாற்று சாதனை படைத்துள்ளது.  பதிப்பகத்துறையில் உலக புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனம் மேக்மில்லன். மின்னணு தொழில்நுட்பத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிறுவனம் கோலோச்சி வரு கிறது. தற்போது இந்த நிறுவனம் டாடாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் பெங்க ளுருவில் செயல்பட்டு வரும் எம்பிஎஸ் லிமி டெட் நிறுவனத்தில் பணியாற்றும் ஐ.டி ஊழி யர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பழி வாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதற்கு எதிராக சிஐடியு தலைமையிலான கர்நாடகா தொழில்நுட்ப ஊழியர் சங்கத்தில் (கேஐடியு) இணைந்து தொழிலாளர்கள் போராடி வந்த னர். 

2018இல் பெங்களுருவில் பணியாற்றும் எம்பிஎஸ் தொழிலாளிகளை பழிவாங்கும் நட வடிக்கையாக பணி இடமாற்றம் செய்தது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கேஐடியு உதவி யுடன் தொழில் தாவா எழுப்பினர். தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்பு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே சங்கத்துக்கு தலைமை வகித்த 10 ஊழியர்களை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. தொழிலாளர்களின் கடு மையான எதிர்ப்பை தொடர்ந்து இந்த நட வடிக்கையை திரும்பப்பெற வேண்டிய கட்டா யம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான தொழிலா ளர்கள் நிறுவனத்தின் முன்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். அதே நேரத்தில் தொழில் தாவா சட்டத்தின் பிரிவு 33இன் கீழ் நிறுவன உரி மையாளரை விசாரிக்க தொழிலானர் ஆணை யரிடம் மனு செய்தனர். துணை ஆணையரின் உத்தரவின்படி 2018 செப்டம்பர் முதல் கர்நாடக ஐடி/ஐடிஇஎஸ் ஊழியர் சங்கத்தின் தலைமை யில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிர்வாகம் முன்வந்தது. 

தொழிலாளர் துறையின் துணை ஆணை யர் தலைமையில் நிர்வாக பிரநிதிகளும், தொழிற்சங்க தலைவர்களும் பங்கேற்ற இறுதி கட்ட பேச்சுவார்த்தை வெள்ளியன்று (அக்.4) நடந்தது. இதில் தொழிலாளர்களின் கோரிக்கை கள் அனைத்தையும் ஏற்க வேண்டிய கட்டாயம் நிர்வாகத்துக்கு ஏற்பட்டது. ஐடி துறையில் வர லாற்று சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தத்தின் மூலம் 207 ஊழியர்கள் பெங்களுருவிலிருந்து டேரா டூனுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது. 2018 ஏப்ரல் மாதம் முதல் முன்தேதியிட்டு அனைத்து சலுகைகளுடன் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஸ்ரீதர் உள்ளிட்ட 4 கேஐடியு தொழிற்சங்க தலைவர்களின் பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் ஒப் பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

;