பொருளாதாரம்

img

2020-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.2 சதவீதமாக குறையும் - எஸ் & பி குளோபல்

2020-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.2 சதவீதமாக சரியும் என்று எஸ் & பி குளோபல் ரேட்டிங் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பொருளாதார மந்த நிலை, கடந்த சில ஆண்டுகளாக காணப்பட்டு வருகிறது. உற்பத்தி துறை, ஆட்டோ மொபைல் துறை உள்ளிட்ட துறைகள் கடும் சரிவை சந்தித்து வருகிறது. மூடிஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் சேவை, கடந்த செவ்வாய் அன்று, 2020ம் ஆண்டிற்கான வளர்ச்சியினை 5.4 சதவீதத்தில் இருந்து 5.3 சதவீதமாக குறைத்து கொண்டதுள்ளது. இந்த நிலையில், 2020-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.2 சதவீதமாக சரியும் என்று எஸ் & பி குளோபல் ரேட்டிங் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவே  எஸ் & பி குளோபல் ரேட்டிங் நிறுவனத்தின் முந்தைய கணிப்பில் 2020-ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. தற்போது அதனை 5.2% ஆக குறைத்துள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக சர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளதாகவும், ஆசிய பசிபிக் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் என்றும் எஸ் & பி குளோபல் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

;