பொருளாதாரம்

img

இந்தியாவிலிருந்து  மூன்றே  நாளில்  ரூ 3924 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்

இந்தியாவிலிருந்து கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ 3 ஆயிரத்து 924 கோடி மதிப்பிலான அந்நிய முதலீடு வெளியேறியிருக்கிறது. இது இந்திய சந்தையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவின் பொருளாதார நிலை தொடர்ந்து சிக்கலுக்கு உள்ளாகி வருகிறது. மோடி அரசு பல்வேறு சலுகைகளை அளித்து அந்நிய முதலீடுகளை ஈர்க்க முயன்றது. சமீபத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 35 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக குறைத்தது.  ஆனால் இந்தியாவில் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்திருக்கும் நிலையில் மோடியின் வார்த்தைகளை நம்ப அந்நிய முதலீட்டாளர்கள் தயாராக இல்லை. குறிப்பாக ஏற்கனவே இந்தியாவில் இருந்து வரும் அந்நிய முதலீடும் இங்கிருந்து வெளியேறும் நிலையே தொடர்கிறது. குறிப்பாக நடப்பு அக்டோபர் மாதத்தில் முதல் மூன்று வர்த்தக நாளிலேயே 3,924 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளது. வைப்புத் தொகை தரவுகளின் படி, குறிப்பாக 2,947 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் ஈக்விட்டி சந்தையிலிருந்து வெளியேற்றியுள்ளதாகவும், இதே கடன் சந்தையில் இருந்து 977 கோடி ரூபாயும் வெளியேற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 மொத்தத்தில் நடப்பு அக்டோபர் மாதத்தில் 1 - 4ம் தேதிக்குள் மொத்தம் 3,924 கோடி ரூபாய் முதலீட்டை வெளியேற்றியுள்ளனர். கடந்த அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தி என்பதால் விடுமுறை என்பதால், இந்த வெளியேற்றவும் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே கடந்த செப்டம்பர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் சுமார் 7,850 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 0.25 அடிப்படை புள்ளிகள் குறைத்து, 5.15 சதவிகிதமாக குறைத்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் இந்த வட்டி குறைப்பு என்பது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது

;