பொருளாதாரம்

img

2020-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக சரியும் - மூடிஸ் நிறுவனம்

2020-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக சரியும் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் காணப்படுகிறது. மேலும், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உற்பத்தி துறை, கட்டுமானத்துறை உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில், 2020-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக சரியும் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய கணிப்பில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாக இருக்கும் என்று கூறிய மூடிஸ் நிறுவனம், தற்போது அதன் கணிப்பை 2.5 சதவீதமாக குறைத்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

 

 

;