பொருளாதாரம்

img

2020 மார்ச் காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி 1.2 சதவீதம் - எஸ்.பி.ஐ அறிக்கை

2020-ஆம் ஆண்டின் மார்ச் காலாண்டில், இந்தியாவின் ஜி.டி.பி 1.2 சதவீதம் என்று எஸ்.பி.ஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் ஜி.டி.பி 5.1 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 5.6 சதவீதமாகவும், மூன்றாம் காலாண்டில் 4.7 சதவீதமாகவும் இருந்தது. இந்த நிலையில், எஸ்.பி.ஐ வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2020-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி 1.2 சதவீதம் என்று தெரிவித்துள்ளது. மேலும், 2020-ஆம் ஆண்டின் மொத்த ஜி.டி.பி 4.2 சதவீதம் என்றும், 2021-ஆம் ஆண்டில் ஜி.டி.பி (-)6.8 சதவீதம் என்றும் கணித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தின் 7 நாட்கள் ஊரடங்கு காலத்தில், 1.4 லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஜி.டி.பி-யில் 10 மாநிலங்களின் பங்குகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 15.6 சதவீதமும், தமிழகத்தில் 9.4 சதவீதமும், குஜராத்தில் 8.6 சதவீதமும், மொத்தமாக 75 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

;