பொருளாதாரம்

img

பொருளாதார மந்த நிலையின் எதிரொலி: அசோக் லேலண்ட் நிறுவனம் கட்டாய விடுமுறை அறிவிப்பு

நாடு முழுவதும் கடுமையான பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள சூழலில் ஆட்டோ மொபைல் துறை கடும் நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனம் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை அறிவித்துள்ளது. 
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு 7.5 சதவீதம் ஆகும். ஆனால் மோடி அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற தவறான பொருளாதாரக் கொள்கையால்தான் ஆட்டோமொபைல் துறை mதற்போது கடும் சரிவை சந்தித்துள்ளது என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது. 
இந்நிலையில் தற்போது வாகன உற்பத்தி இந்த நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனமும் தங்கள் ஊழியர்களுக்கு 5 நாட்கள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 9 -ஆம் தேதி வரை விடுப்பு அளித்துள்ளது. வாகன உற்பத்தி குறைவால் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள் வணிக ரீதியான வாகனங்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து ஊழியர்களுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 நாட்கள் உற்பத்தியை முடக்குவதால் நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்கள் 9000 பேர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.  இதுகுறித்த அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிக்கையில்  நிதி நிலையை கருத்தில் கொண்டு கட்டாய விடுப்பு நாட்களை மேலும் அதிகரிப்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக யூனியன்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு நிறுவனத்தின் வெளியேயும் ஒட்டப்பட்டுள்ளது. கட்டாய விடுப்பு எனினும் அத்தியாவசிய பணியில் உள்ளவர்கள் பணிக்கு வருவது குறித்து அந்தந்த துறைகளின் பொறுப்பாளர்கள் அறிவிப்பார்கள் என்றும் கூறியுள்ளது. 
 

;