திங்கள், ஆகஸ்ட் 3, 2020

பேஸ்புக்உலா

img

வலைப்பதிவு : இடைவெளி 255 கி.மீ

எல்லைப் பிரச்சனை நடந்த இடத்துக்கும் பிரதமர் வீரர்களை சந்தித்த இடத்துக்கும் இடைவெளி சுமார் 255 கி.மீ. அமீர்கானின் ‘3 இடியட்ஸ்’ திரைப்படம் எடுத்த இடம் எல்லைக்கு இன்னும் அருகே இருந்தது.
- பத்திரிகையாளர் துருவ் ரதீ

உன் நண்பனைப் பற்றி சொல்.உன்னைப்பற்றி சொல்கிறேன் என்பது பழமொழி.
-பிரசாந்த் பூஷண்

விசாரணைக் கைதிகளின் சித்ரவதை குறித்து இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் வேதனை தருவதாகவும் மிகவும் வெட்கக்கேடாகவும் உள்ளது. சித்ரவதை என்பதுஇந்திய காவல்துறை கலாச்சாரத்தின் பிரிக்கமுடியாதஅம்சம் எனவும் சில புலன் விசாரணைகளில் சித்திரவதைதான்மையமான அம்சமாகவும் உள்ளது எனவும் நீதியரசர் ஏ.பி.ஷா அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
- மூத்த பத்திரிகையாளர் என்.ராம்

இராணுவ வீரர்களிடையே பிரதமரின் உரை அவர்களுக்கு புத்துணர்வு தந்து இருக்கும். அது வரவேற்க தகுந்ததுதான்! உண்மை என்னவெனில் ஜூன் 15ம் தேதி இரவுஎன்னதான் நடந்தது என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை. எல்லையின் முக்கிய பகுதிகளில் என்ன நிலைமை என்பது நமக்கு தெரியாது. ஏதாவது தருணத்தில் வாய்சவடால் உண்மைக்கு  வழிவிட்டாக வேண்டும்.
-ராஜ்தீப் சர்தேசாய்

;