பேஸ்புக் உலா

img

நாடாளுமன்றத்தில் பொய்சொல்ல மாட்டாங்க என நம்புவோருக்காக!

நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசமைப்பு பிரிவு 370 மற்றும் 35A காரணமாக ஜம்மு காஷ்மீர் முன்னேறவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

சங்பரிவார் அமைப்புகள் ஊடகங்களிலும் , சமூக ஊடகங்களிலும் இதையே கொண்டுவந்து கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.சில அறிவு ஜீவிகள் மற்றும் உயர் பொறுப்புக்களை வகித்தோரும் இதையே வேதமென ஓதிக்கொண்டிருக்கிறார்கள்.

சப்ரங் இண்டியா https://sabrangindia.in/…/who-more-developed-jammu-and-kash… இந்தியா தேசிய குடும்பநல ஆய்வின் அடிப்படையில் சில விஷயங்களை ஒப்பிட்டுக் காட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் பேசுவது ,அச்சடித்த காகித்தில் வருவதையே உண்மை என நம்பிக்கொண்டிருப்பவர்களுக்காக இதை பதிவிடுகிறேன்.

 

1.ஊட்டச்சத்து அளவு ( குழந்தைகளின் எடை குறைவு )

ஜம்மு & காஷ்மீர் - 16.6%

உத்திரபிரதேசம் – 39.5%

அகில இந்திய சராசரி – 35.8%

 

2.குழந்தை இறப்பு விகிதம் ( ஆயிரம் குழந்தைகள் பிறப்பிற்கு )

ஜம்மு & காஷ்மீர் - 32

உத்திரபிரதேசம் – 64

அகில இந்திய சராசரி – 41

 

3.ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகள் இறப்பு விகிதம் ( ஆயிரம் குழந்தைகளுக்கு )

ஜம்மு & காஷ்மீர் - 38

உத்திரபிரதேசம் – 78

அகில இந்திய சராசரி – 50

 

4.குடும்ப கட்டுப்பாட்டை கடைபிடிப்பது

ஜம்மு & காஷ்மீர் - 57.3 %

உத்திரபிரதேசம் – 45.5 %

அகில இந்திய சராசரி – 53.5 %

 

5.பதின்ம வயது கருத்தரித்தல் ( 15 முதல் 19 வயது தாய்கள் )

ஜம்மு & காஷ்மீர் - 2.9 %

உத்திரபிரதேசம் – 3.8 %

அகில இந்திய சராசரி – 7.9 %

 

6.கருவுற்ற தாய் நான்கு முறை மருத்துவ வசதி பெறுவது

ஜம்மு & காஷ்மீர் - 81.4 %

உத்திரபிரதேசம் – 26.4 %

அகில இந்திய சராசரி – 51.2 %

 

7.தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல்

ஜம்மு & காஷ்மீர் - 75.1 %

உத்திரபிரதேசம் – 51.1 %

அகில இந்திய சராசரி – 62 %

 

8.கணவனால் வன்முறைக்குள்ளான அனுபவமுள்ள பெண்கள் விகிதம்

ஜம்மு & காஷ்மீர் - 9.4 %

உத்திரபிரதேசம் – 36.7 %

அகில இந்திய சராசரி – 31.1 %

 

9.கணவனின் வன்முறைக்கு ஆளான பெண்கள்

ஜம்மு & காஷ்மீர் - 14 %

உத்திரபிரதேசம் – 38 %

அகில இந்திய சராசரி – 33 %

 

10.18 யவதில் திருமணமான பெண்கள் விகிதம்

ஜம்மு & காஷ்மீர் - 9.2 %

உத்திரபிரதேசம் – 22.5 %

அகில இந்திய சராசரி – 27.9 %

 

11.21 வயதில் திருமணமான ஆண்கள் விகிதம்

ஜம்மு & காஷ்மீர் - 9.5 %

உத்திரபிரதேசம் – 21.9 %

அகில இந்திய சராசரி – 17.4 %

With greetings
Ramkumar gunavathi.k

;