பேஸ்புக் உலா

img

சென்று வா  என் இளம் தோழனே  நீ வைத்த மிச்ச கணக்கை நாங்கள் தீர்ப்போம்!

அசோக் என்று பெயர் கொண்ட அசாத்தியனே!
...................................................

அன்றாடம் சந்திக்கும் 
சக மனிதர்களின் 
கடக்க வியலா
சாலை வசதிக்காக. .

கல்வி கற்க சான்றிதழ் 
இல்லாமல் தவிக்கும்
குழந்தைகளின்
பெற்றோர் துயர் போக்க. .

அதிகாரத்தை எதிர்க்க
குரலற்றவர்களின்
அன்றாட
வாழ்க்கை பிரச்சனைக்காக. .

இருள் விரட்டும்
தெரு விளக்கு 
எரியவில்லை என்றால். .

எடை குறைக்கும்
ரேஷன் கடைகளில் 
அநியாயம் என்றால். .

கண்ணெதிரே அநீதி 
நடக்கும் என்றால். .

கொதித்தெழுந்து 
ஊர்வலம் போனவன்,
நரம்பு புடைக்க 
முழக்கமிட்டடவன்,
இதோ இறுதி ஊர்வலமாய் 
எம் தோழர்கள் 
சுமக்க சென்று கொண்டிருக்கிறான்.

உதிரம் கேட்டு தவிக்கும் 
உயிர்களுக்கு
உதிரம் கொடுத்தவனே...

சாதி ஆதிக்க வெறி 
எடுத்தவர்களின் அரிவாள்கள் 
உன் உதிரத்தை 
சாலையில் போக்கின. .

உயிர் காக்க அவர்கள் 
சாதியினருக்கு நீ கொடுத்த 
உதிர கொடையை என் செய்வர்!

உன் பெயர் எழுத முடியாமல்
கண்ணீர் திரை மறைக்கிறது.
எனினும் அழப்போவதில்லை.

சென்று வா 
என் இளம் தோழனே 
நீ வைத்த மிச்ச கணக்கை
நாங்கள் தீர்ப்போம்!

- உன் அன்பு தோழன்
எஸ்.ஜி.ரமேஷ்பாபு

;