பேஸ்புக் உலா

img

காஷ்மீர் விவகாரத்தை படேல் கையாண்டிருந்தால் ...

அரசமைப்புச் சட்டத்தில் 370வது பிரிவு நேருவால் உருவாக்கப்பட்டது என்றும், படேல் இதை கையாண்டிருந்தால் அப்போதே இந்த ‘தவறை’ செய்திருக்க மாட்டார் என்றும் சங்பரிவார் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருக்கிறது.

உண்மை என்னவெனில் இந்த சட்டப்பிரிவு இந்திய அரசுக்கும் அன்று ஷேக் அப்துல்லா தலைமையிலான காஷ்மீர் அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தால் உருவாக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் 1949ம் ஆண்டு மே மாதம் 13-14 தேதிகளில் புதுதில்லியில் உள்ள சர்த்தார் படேல் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இந்த பிரிவு அரசமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டது படேல் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் தான்.

அப்போது நேரு இந்தியாவில் இல்லை. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார்.

-Kanagaraj Karuppaiah

;