நீதிமன்றம்

img

தமிழகத்தில் ஊர் சுற்றிய 50 ஆயிரம் பேர் கைது

ரூ.10 லட்சம் அபராதம் வசூல்

சென்னை, ஏப்.1- தமிழகம் முழுவதும் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி ஊர் சுற்றிய 50 ஆயிரம் பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 ஆம் தேதி முதல் ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்ட நிலையில் வெளியில் சுற்றுபவர்களை கட்டுப்ப டுத்த காவல்துறை பெரும் முயற்சி செய்து வருகிறது.

ஆரம்பத்தில் தடியடி நடத்தி பொது மக்களை விரட்டிய போலீசார் பின்னர் அறிவுரைகள் கூறியும், தோப்புக்கரணம் உள்ளிட்ட நூதன தண்டனைகளை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் பொது மக்கள் பலர் கொரோனா பய மின்றி வெளியில் சுற்றித் திரிந்து கொண்டே இருக்கி றார்கள். இதுபோன்று வெளி யில் சுற்றுபவர்கள் மீது ஊர டங்கு உத்தரவு அமலுக்கு வந்த மறுநாளில் இருந்து  வழக்குப் பதிவு செய்யப் பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 6 நாட்களில் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரு10 லட்சம் அபராதம் வசூ லிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 45 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. கைது செய்யப்  பட்ட அனைவரையும் காவல்  துறையினர் ஜாமீனில் விடு வித்துள்ளனர். இருப்பி னும் அவர்கள் பயன்ப டுத்திய 34 ஆயிரம் வாக னங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

தமிழகம் முழுவதிலும்  வடக்கு மண்டலத்தில் 2 ஆயி ரத்து 621 வழக்குகள் பதிவாகி யுள்ளன. 3 ஆயிரத்து 56 பேர்  கைது செய்யப்பட்டு அவர்  கள் பயன்படுத்திய 2 ஆயி ரத்து 303 வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன.

மத்திய மண்டலத்தில் 1,895 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,435 பேர் கைதாகியுள்ளனர். தெற்கு மண்டலத்தில் 2,477 பேர் கைது செய்யப்பட்டு 2,095 வழக்குகள் பதிவாகி உள்ளன. 1,547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள் ளன. மேற்கு மண்டலத்தில் 148 பேர் கைது செய்யப் பட்டனர். இருப்பினும் பொது மக்கள் அதனையும் மீறி வெளியில் சுற்றுவதால் தமி ழகம் முழுவதும் போலீ சார் பொது மக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள் ளது. இதன் காரணமாகவே 50 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

;