வெள்ளி, ஆகஸ்ட் 7, 2020

நீதிமன்றம்

img

சொப்னா மீது யுஏபிஏ வழக்கு என்ஐஏ சுமத்தியது

கொச்சி, ஜுலை 10- அரசுமுறை பார்சலில் தங்கம் கடத்திய சம்பவத்தில் சொப்னா மீது என்ஐஏ வழக்கு பதிவு செய்திருப்பதாக கேரள உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசு நீதிமன்றத்தில் வெள்ளியன்று சமர்ப்பித்தது.    அதில், சந்தீப், சொப்னா, சரித் ஆகியோர் தங்க கடத்தலில் பங்காளிகள். விசாரணை துவக்க கட்டத்தில் உள்ளது. பார் சலை விடுவிக்க சொப்னா முயன்றார். பின்னர் தொலைபேசி செயல்பாட்டை நிறுத்தி வைத்தார். சம்மன் வழங்க முயன்ற போதும் நடக்கவில்லை. இவர் தலைமறைவாக உள்ளார். அதி காரிகள் அவரிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே சொப்னா வின் பங்கு தெளிவாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து சொப்னாவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் செவ்வாயன்று விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்தி வைத்தது.  வெள்ளியன்று காலை 9.15 க்கு சொப்னா மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் (யுஏபிஏ) 16,17 பிரிவு களின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு தெரி வித்துள்ளது.  முன்ஜாமீன் சட்ட எல்லைக்குள் வராது எனவும், தேச நலனை பாதிக்கும் குற்றச் செயல்கள் புரிந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சொப்னா தரப்பில் என்ஐஏ வின் முதல் தகவல் அறிக்கை வழங்குமாறு கேட்டுக்கொள் ளப்பட்டது.  

;