நீதிமன்றம்

img

ஒப்பந்தத் தொழிலாளர்களை பாதுகாக்க புதிய சட்டம் இயற்றுக!

மத்திய அமைச்சர்களுக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்

சென்னை, நவ.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன், ஒப்பந்தத் தொழிலாளர்களை பாதுகாத்திட அவர்களது ஊதியத்தை விலைவாசி குறியீட்டெண்ணுடன் இணைக்க தகுந்த புதிய சட்டத்தினை நாடாளுமன்றத்தில் இயற்ற வேண்டுமென வலியுறுத்தி, மத்திய நிதித் துறை அமைச்சர்  நிர்மலா சீத்தாராமன் மற்றும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர்  சந்தோஷ் கங்கு வார் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  அக்கடிதம் வருமாறு:  விலைவாசி உயர்வு காரணமாக குறைந்து வரும் உண்மையான கூலியால், அவதிப்படும் ஒப்பந்த ஊழியர்களின் பரிதாப நிலையை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்பு கிறேன். நிரந்தர ஊழியர்களுக்கு சட்டப்படி தர வேண்டிய சலுகைகள் காரணமாக ஏற்படு கிற செலவை குறைக்கவே பொதுத்துறை மற்றும் தனியார்துறைகளில் அணி திரட்டப் படாத ஒப்பந்த ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப் படுகின்றனர்.

துரதிருஷ்டவசமாக, பெருவாரியான இந்த ஒப்பந்த ஊழியர்களின் கூலி என்பது விலைவாசி உயர்வால் பாதுகாக்கப்படாத நிலை உள்ளது. அணிதிரட்டப்பட்ட துறை யில் உள்ள ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக்குறியீட்டு எண் ஊதியம் இணைக் கப்பட்டுள்ளது. நமது தேசத்தின் வளர்ச்சி க்கு கணிசமான பங்களிப்பை செய்து வரும் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் உண்மை ஊதியம் விலைவாசி உயர்வால் குறையா மல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். எனவே, இந்தப் பெருவாரியான தொழி லாளர்களை பாதுகாத்திட அவர்களது ஊதி யத்தை விலைவாசி குறியீட்டு எண்ணுடன் இணைக்க தகுந்த புதிய சட்டத்தினை இயற்றுவது நாடாளுமன்றத்தின் உடனடி கடமை என நான் கருதுகிறேன். இந்த சட்டம், தொழிலாளர்களின் விலை வாசி உயர்வுக்கேற்ப தகுந்த ஊதிய உயர்வினை அவர்களது நிறுவனத்திட மிருந்து பெற அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதாக இருந்திடல் வேண்டும். ஊதியம் வழங்கும் சட்டத்திற்கு தகுந்த திருத்தங்கள் கொண்டு வந்து அணி திரட்டப்படாத ஒப்பந்த ஊழியர்கள் நிவார ணம் பெற வழிவகை செய்திட தாங்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.

;