நீதிமன்றம்

img

வேலூர் சிறையில் நளினி-முருகன் தொடர் உண்ணாநிலை: உடல் சோர்வு

வேலூர், டிச.6- வேலூர் சிறையில் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் நளினி-முருகன் உடல்நிலை சோர்வடைந்துள்ளதால் 2வது  நாளாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும் அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். தன்னையும் தனது கணவரையும் சென்னை புழல் சிறைக்கு மாற்ற சிறை அதிகாரிகள் மறுக்கி றார்கள். சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டும் கூட சிறை அதிகாரிகள் அதை கடை பிடிக்கவில்லை. தங்களை கர்நாடக சிறைக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ மாற்ற வேண்டும் என்று நளினி தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நளினி  9-வது  நாளாக உண்ணாநிலை போராட்டத்தை மேற் கொண்டு வருகிறார். கருணை கொலை செய்யக்கோரி முருகனும் சிறையில் 7-வது நாளாக உண்ணா நிலையை மேற்கொண்டிருக்கிறார். நளினி-முருகன் உடல் நிலையை மருத்துவக் குழு வினர் கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு குறித்து காலை மற்றும் மாலை நேரங்களில் பரிசோதனை செய்  யப்படுகிறது. 2 பேரின் உடல்நிலை சோர்வடைந் துள்ளது. அவர்களுக்கு இன்று 2-வது நாளாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

;