திங்கள், ஆகஸ்ட் 3, 2020

நீதிமன்றம்

img

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு

குற்றப் பத்திரிகை தாக்கல்

திருச்சி,ஜூலை 12- திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் திரு வாரூர் முருகன்-சுரேஷ் மீது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த ஆண்டு அக்டோபர் 2 அன்று ரூ.13  கோடி மதிப்பிலான தங்க,  வைர நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டன.  இதில் முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகனை கைது  செய்து, 162 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும், கோட்டை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் முரு கனுக்கு ஜாமீன் வழங்குவ தாக திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் எண் 1 உத்தரவிட்டது. 

இதையடுத்து அப்போ தைய காவல் ஆய்வாளர்  கோசலைராமன் உள்பட 25 பேரை சாட்சிகளாககொண்டு முருகன், சுரேஷ் உள்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் எண் 1-ல் தாக்கல் செய்யப் பட்டது. இதற்கு நீதிமன்ற விசாரணை எண்ணும் வழ ங்கப்பட்டு விட்டதாகவும், முருகன் உள்ளிட்டோரிடம் விரைவில் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரி வித்தனர்.
 

;