நீதிமன்றம்

img

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 6பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 6 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர்  உத்தரவிட்டுள்ளார். 
சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய ராமதிலகம், தாரணி, ராஜமாணிக்கம், கிருஷ்ணவள்ளி, பொங்கியப்பன், ஹேமலதா ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 17 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

;