நீதிமன்றம்

img

அரசு அனுமதியின்றி கோயில்களில் கட்டணம் வசூலிக்க தடை


தமிழகத்தில் அரசின் அனுமதியின்றி கோயில்களில் பார்க்கிங் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடுத்த பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து மாயாண்டி என்பவர்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உரிய ஒப்பந்தம் இல்லாமல் கோயில்களில் பார்க்கிங் கட்டணம் மற்றும் நுழைவுக்  கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம் ஆகும். இந்த உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்ப்பில் கூறியுள்ளது. அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க உரிய முறையில் ஒப்பந்தம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

;