நீதிமன்றம்

img

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் - உச்சநீதிமன்றம்


புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தாக்கல் தாக்கல் செய்தி மனுவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. 

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கு  உள்ள அதிகாரம் குறித்து கிரண்பேடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இதே விவகாரத்திற்காக மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் , கிரண்பேடி மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மனுக்களை தள்ளுபடி செய்தது. 
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் எனவும், புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் கிரண்பேடி தலையிடக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. முன்னதாக இதே விவகாரம் தொடர்பாக கிரண்பேடி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

;