நீதிமன்றம்

img

ரித்திக் முஸ்கின் வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு 

முஸ்கின், ரித்திக் கொலை வழக்கில் குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனையை அக்டோபர் 20-ம்தேதி வரை உச்ச நீதிமன்றம் நிறுத்தி உத்தரவிட்டுள்ளது. 
கோவை மாவட்டத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு தனியார்ப் பள்ளியில் படித்து வந்த முஸ்கின் என்ற 6 வயது சிறுமி மற்றும் அவரது தம்பி ரித்திக் ஆகியோரை மோகன் ராஜ், மனோகரன் இருவரும்  கடத்தி கொலை செய்தனர். இதில் சிறுமி முஸ்கின் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் உறுதியானது.  இந்நிலையில் பாலியல் குற்றவாளி மனோகரன் மீது மரண தண்டனையை உறுதி செய்தது.

இந்த இரட்டை கொலை வழக்கு விசாரணையில் சிக்கிய மற்றொரு குற்றவாளியான மோகன்ராஜ், போலீசிடம் இருந்து தப்பியபோது  காவல் துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். இந்த வழக்கில் மனோகரனுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. இந்நிலையில் தன் மீதான மரண தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
மனோகரன் தொடர்ந்த வழக்கு, நீதிபதி ரோகின்டன் ஃ பாலி நரிமன் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. ஆனால் மனோகரன் தரப்பு சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. மனோகரனின் மறு ஆய்வு மனு மீதான விசாரணையை அக்டோபர் 16 ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், வரும் 20 ம் தேதி நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனைக்கு நிறுத்திவைத்து, உத்தரவிட்டனர். 
 

;