நீதிமன்றம்

img

சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி - தாயார் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு


தேனி, அக்.12- மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக சென்னையில் உள்ள சவிதா மருத்துவக் கல்லூரி யில் படிக்கும் மாணவி பிரியங்கா ,அவ ரது தாயார் மைனாவதி ஆகியோரை  தேனி சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர் . நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் மருத்து வக் கல்லூரிகளில் சேர்ந்த மாண வர்கள் உதித் சூர்யா, பிரவீன், ராகுல் மற்றும் அவர்களது தந்தையர் வெங்க டேசன், சரவணன், டேவிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி யில் படித்த மாணவர் இர்பான், சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவ ரது தந்தை முகமது சபியிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி டாக்டர் என தெரிய வரவே அவரை போலீசார் கைது செய்தனர். 

 மாணவி கைது 

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக   சிபிசிஐடி காவல்துறை சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில்  என்டிஏ எனும் தேசிய தேர்வு முகமை ஆணையத்திற்கு தமி ழகத்தில் ஒரே பெயரில், முகவரியில் வெவ்வேறு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய விபரம் குறித்து கடிதம் அனுப்பப்பட்டது .தேசிய தேர்வு முகமை ஆணையம் அளித்த தகவ லின்படி சென்னை தண்டளத்தில் உள்ள சவிதா மருத்துவக் கல்லூரி மாணவி பிரியங்கா பெயரில் இரண்டு இடங்களில் தேர்வு எழுதியது தெரிய வந்தது .அதனைத்தொடர்ந்து பிரி யங்காவை  சென்னையில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத் திய பின்  சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு தேனி சிபிசிஐடி அலுவலகம் கொண்டு வந்தனர் . மாணவியுடன் அவரது தாயார் மைனாவதியிடமும் காலை முதல் விசாரணை நடத்திய காவல்துறையினர்   மதியம் 1 மணி யளவில் மருத்துவப்பரிசோதனைக் காக தேனி மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று  மருத்துவப் பரி சோதனை முடித்து மீண்டும், இருவரை யும் தேனி  சிபிசிஐடி அலுவலகம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் சவிதா மருத்து வக் கல்லூரி முதல்வர் டாக்டர் தாமோ தரன், அக்கல்லூரியின் கண்காணிப் பாளர் பொன்னம்ப நமச்சிவாயம் மற் றும் பெண் ஊழியர் உள்ளிட்ட 3 பேரிடம் தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். பின்னர்   மாணவி பிரியங்கா, அவரது தாயார் மைனா வதி ஆகியோர் கைது செய்யப்பட்டு தேனி  குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர் .

மேலும் விசாரணை 

மாணவியின் சான்றிதழ்கள் அனைத்தையும் வாங்கி சரிபார்த்த அதிகாரிகள் அவர் எந்த நீட் பயிற்சி மையத்தில் பயின்றார்? மருத்துவக் கல்லூரியில் சேர எவ்வளவு பணம் கொடுத்தார்? புரோக்கர்கள் யாரை யேனும் அணுகினாரா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் முறைகேடு நடத்தி யவர்கள், தவறை கண்டறிந்த விசா ரணைக்குழு அலுவலர்கள், முதல் வர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

 

;