தேர்தல் 2019

img

மத்திய பிரதேச மாநில பா.ஜ.க வேட்பாளார் சாத்வி பிரக்யாவுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் நோட்டீஸ்

பிரச்சாரம் செய்ய விதித்திருந்த தடையை மீறியதாக மத்திய பிரதேச பா.ஜ.க வேட்பாளார் சாத்வி பிரக்யாவுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


மத்தியப்பிரதேச மாநிலத்தின் போபால் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுபவர் சாத்வி பிரக்யாசிங் தாகூர். இவர் அண்மை காலமாக தனது பேச்சினால் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார். மாட்டு கோமியத்தால் புற்றுநோய் சரியானதாக கூறி பின்பு அவர் அறுவை சிகிச்சை செய்தது அம்பலமாகியது.


பிரக்யாசிங் பிரச்சாரம் ஒன்றின்போது முன்னாள் பயங்கரவாத தடுப்பு காவல்துறை தலைவர் ஹேமந்த் கார்கரே மீது சாபம் இடுவதாகவும் மற்றும் பாபர் மசூதி இடிப்பு குறித்து தவறான தகவல்களையும் பேசினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தேர்தல் ஆணையம் பிரக்யாசிங் அடுத்த மூன்று நாட்களுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள தடைவிதித்து கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது.


இந்த தடைக்காலத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டதாக தற்போது அவருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


;