தேசம்

img

தலித் இளைஞரை படுகொலை செய்த தொழிலதிபர் மாருதி ராவ் தற்கொலை...

ஹைதராபாத்;
தெலுங்கானா மாநிலத்தில், தலித் இளைஞர் பிரணாய் குமார் (22), கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி பட்டப் பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தெலுங்கானா மாநிலம் மிர்யாலகுடா பகுதியைச் சேர்ந்ததொழிலதிபரான, மாருதி ராவின்மகள் அம்ருதாவும், இளைஞர் பிரணாயும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், அதனை ஏற்றுக்கொள்ள முடியாத மாருதி ராவ், கூலிப்படையை ஏவி, பிரணாயை படுகொலை செய்தார்.

“எனது மகள் அம்ருதா தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்தது எனக்கு பிடிக்கவில்லை; இதனால் பிரணாயை கொலை செய்ய கூலிப்படையை அமர்த்தினேன்; எனது சொத்து முழுவதும் அழிந்தாலும் பரவாயில்லை, ஒரு கோடி ரூபாய் தருவதாக கூலிப்படையிடம் தெரிவித்து கொலை செய்தேன்” என்று போலீசாரிடம் மாருதி ராவ் வாக்குமூலமும் அளித்தார்.தெலுங்கானாவையே உலுக்கிய இவ்வழக்கில், போலீசார் முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், மாருதி ராவ், அவரது மகன் சிரவண் உள்ளிட்டோர் கடந்தாண்டு ஜாமீனில் வெளியே வந்தனர். இவர்கள் மிர்யாலகுடா வீட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில், ஹைதராபாத் ஆரிய வைசிய பவன் என்ற விடுதியின் அறை எண் 306-இல்மாருதி ராவ் தற்கொலை செய்துகொண்டு பிணமாக கிடந்ததுதெரியவந்துள்ளது. அவரதுஉடலை மீட்டுள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மருமகனைக் கொன்று, மகளின் வாழ்க்கையை, தானே அழித்துவிட்ட மன உறுத்தலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

;