தேசம்

img

மகாராஷ்டிர அரசு என்ன 50-50 பிஸ்கெட்டா?

ஹைதராபாத்:
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அக்கட்சி சிவசேனாவின் ஆதரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியைத் தருவதாக இருந் தால் மட்டுமே ஆதரிப்போம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறி வருகிறார். தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைவர் அமித்ஷா தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 50:50 என்ற அடிப்படையில் மகாராஷ்டிர மாநில அமைச்சரவையைப் பங் கிட்டுக் கொள்ளத் தயார் என்று அமித்ஷா வாக்குறுதி அளித்தார் என்றும் தாக்கரே கூறி வருகிறார்.இந்நிலையில், பாஜக - சிவசேனாவின் 50:50 ஆட்டத்தை மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான ஓவைசி கடுமையாக விமர்சித்துள்ளார். “இது என்ன 50:50 புதிய வகை பிஸ்கெட்டா?” என்று சாடியுள்ளார். “பாஜக - சிவசேனாவுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. அவர்கள் பேசுவது எல்லாம் 50:50 பற்றியே உள்ளது” என்று கூறியுள்ள ஓவைசி, “இது என்ன வகையான வளர்ச்சிக்கான விஷயம்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ,“மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகஅல்லது சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு தனது கட்சிஉதவாது” என்றும் தெரிவித் துள்ளார்.மஜ்லிஸ் கட்சிக்கு மகாராஷ்டிராவில் 2 எம்எல்ஏ-க்கள்உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;