தேசம்

img

ஊரடங்கு உத்தரவை மீறினால் என்கவுண்டர்...  தெலுங்கானா முதல்வர் எச்சரிக்கை

ஹைதராபாத்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை முறையாகப் பின்பற்றக் கோரி பல்வேறு மாநில அரசுகள் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களைச் சுட்டுத்தள்ள உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் விரிவாகக் கூறியதாவது,"ஊரடங்கு உத்தரவை முறையாகக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். போலீசாரின் உத்தரவு மற்றும் அறிவுரைகளை அவமதித்தால் கண்டதும் சுட உத்தரவிட வேண்டிவரும். அப்படியும் மக்கள் கேட்கவில்லை என்றால், ராணுவத்தை இறக்க வேண்டிய நிலைமை உருவாகும். இந்த நிலைமை உருவாவது தேவையா? நிலைமையை இன்னும் மோசமாக்கக் கூடாது. மக்கள் சிந்திக்க வேண்டும். கொரோனா பிரச்சனையைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு மக்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.  

தெலுங்கானாவில் இதுவரை 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;