தேசம்

img

தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு...

ஹைதராபாத் 
ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதுவரை அங்கு 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 356 பேர் பலியாகியுள்ளனர். 22 ஆயிரத்து 482 பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், தெலுங்கானா ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் ஆளுநர் தமிழிசை உட்பட 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 28 காவலர்கள், 10 மூன்றாம் நிலை ஊழியர்கள், 10 நான்காம் நிலை ஊழியர்கள் (தூய்மை பணியாளர்கள்) ஆகியோர்களுக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசைக்கு கொரோனா பாதிப்பு இல்லை அறிவிக்கப்பட்டுள்ளது. 

;