தேசம்

img

ராமர் கோயிலை எந்த அறக்கட்டளை கட்டுவது? அயோத்தி சாமியார்களுக்குள் அடிபிடி சண்டை துவங்கியது

லக்னோ:
“அயோத்தியில் உள்ள சர்ச்சைக் குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும். இதற்காக ஒரு அறக்கட்டளையை மத்திய அரசு அமைக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “இந்த வழக்கின் ஒரு தரப்பான, நிர்மோகி அகாராவைச் சேர்ந்தவர்களை அறக்கட்டளையில் சேர்ப்பதுகுறித்து, மத்திய அரசே முடிவு செய்யலாம்” என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில், 1990-களில் அயோத்தி கோயில் போராட்டத்தில் முன்னிலை வகித்த, ராம ஜன்மபூமி நியாஸின் (Ram Janmabhoomi Nyas)தலைவரான மஹந்த் நிருத்யா கோபால் தாஸ், உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது போல “புதிய அறக்கட்டளையை உருவாக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை” என்று சர்ச்சையை துவங்கியுள்ளார்.“ராமர் கோவில் கட்டுவதற்காக ஏற்கெனவே ராம் நியாஸ் அறக் கட்டளை இருக்கிறது” என்றும் “நிர்மோகி அகாரா போன்ற மற்றவர்கள் வேண்டுமானால் எங்களுடன் சேர்ந்து கொள்ளலாம்” என்றும் அவர் கூறியுள்ளார்.இதற்கு நிர்மோகி அகாராவும் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது.“நாங்கள் ராம ஜன்மபூமி நியாசுக்கு எதிராகவே போராடி வருகிறோம்;அவ்வாறிருக்க அவர்களின் அறக்கட்டளையில் நாங்கள் இணைய வேண்டும்என்று எப்படி எதிர்பார்க்க வேண்டும்;வேண்டுமானால், எங்கள் அறக்கட்டளையுடன் அவர்களின் அறக்கட்டளையை இணைத்து, எங்களின் ஒரு பகுதியாக மாறிக் கொள்ளட்டும்; ஒருபோதும், நாங்கள் அவர்களில் ஒரு பகுதியாக இருக்க முடியாது” என்று நிர்மோகிஅகாராவின் மஹந்த் தினேந்திர தாஸ்கூறியுள்ளார்.இந்த இரு அமைப்புகளுக்கும் இடையே, ‘திகம்பர் அகாரா’ என்ற மற்றொரு சாமியார் அமைப்பும் கிளம்பியுள்ளது. அந்த அமைப்பின் தலைவரான மஹந்த் சுரேஷ் தாஸ், புதன்கிழமையன்று உத்தரப்பிரதேச முதல்வர்ஆதித்யநாத்தைச் சந்தித்து, “ராமர்கோயிலைக் கட்டுவதற்கு தற்போதுள்ள எந்த அறக்கட்டளையையும் அனுமதிக்கக் கூடாது” என்று வலியுறுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

;