தேசம்

img

விதவையை கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய உ.பி. பாஜக எம்எல்ஏ... ஒரு மாதமாக விடுதியில் அடைத்துவைத்து சித்ரவதை

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய வழக்கில், அம்மாநில பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், ‘போக்சோ’சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வாஜ்பாய் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த சின்மயானந்தா, கல்லூரி மாணவி ஒருவரை வல்லுறவுக்கு உள்ளாக்கிய குற்றத்தில் சிறைக்குப் போனார்.தில்லியைச் சேர்ந்த முன்னாள் பாஜக எம்எல்ஏ பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக அவரது மருமகளே புகார் கொடுத்தார்.இந்நிலையில், கணவனை இழந்த பெண் ஒருவரை ஒரு மாதமாக ஹோட்டல்விடுதியில் அடைத்து வைத்து, கும்பல்வல்லுறவுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட் டில், ரவீந்திரநாத் திரிபாதி என்ற மற்றொரு பாஜக எம்எல்ஏவும் சிக்கியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், பதோகி தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர்ரவீந்திரநாத் திரிபாதி. இவருடைய மருமகன் சந்தீப் திவாரி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 40 வயது விதவைப்பெண் ஒருவரை கடந்த 2016-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், தானே திருமணம் செய்து கொள்வதாக சந்தீப் திவாரி கூறியுள்ளார். அதனை நம்பி, அந்தபெண்ணும் புகார் மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.இதனிடையே, கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில், சந்தீப் திவாரி,எம்எல்ஏ ரவீந்திர நாத் திரிபாதி, மகன் கள் சந்திரபூஷன் திரிபாதி, தீபக் திவாரி,நிதிஷ் திவாரி, பிரகாஷ் திவாரி உள்பட7 பேர், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை ஒரு மாதம் ஹோட்டலில் அடைத்து வைத்துகும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர். இதில் அந்தப் பெண் கர்ப்பமான நிலையில், கருவை கட்டாயப்படுத்தி கலைக்க வைத்ததுடன், வெளியில் சொல்லக்கூடாது என்று கொலைமிரட்டலும் விடுத்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில்தான், எம்எல்ஏ ரவீந்திரநாத் திரிபாதி, சந்தீப் திவாரி உள்ளிட்ட 7 பேர் மீது பதோகி போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

;