தேசம்

img

பாலியல் சாமியார் சின்மயாவிடமும் பணம் பறித்த பாஜக-வினர்

லக்னோ:
சின்மயானந்தாவை மிரட்டி, பணம் பறிக்க முயன்றதாக பாஜக தலைவர்களே 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வாஜ்பாய் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவர் சின்மயானந்தா. மூத்த தலைவரான இவர், சாமியாரும் கூட. ஆனால், தனக்குச் சொந்தமான கல்லூரியில் படிக்கும் இளம் பெண்ணை ஓராண்டுக்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.உத்தரப்பிரதேச பாஜக அரசு, பாதிக்கப்பட்ட மாணவியை சேர்த்தே கைது செய்தது. சின்மயான ந்தாவை  மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டியுள்ளது.அதன் தொடர்ச்சியாக ரத்தோர், அஜீத் சிங் என்ற இரண்டு உள்ளூர் பாஜக தலைவர்களும் தற்போது, கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மட்டுமன்றி, பாஜக பிரமுகர் களான ரத்தோர், அஜீத் சிங் ஆகியோரும் ரூ.1.25 கோடி பணம் கேட்டு சின்மயானந்தாவை மிரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

;