தேசம்

img

சாதி, மத சக்திகளை  நுட்பமாக கையாள்வோம்!

லக்னோ:
மறைந்த தலைவர் கன்சிராமின் 13-ஆவது நினைவு தினத்தையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், “பகுஜன் சமாஜ் கட்சி யானது, கன்சிராம் வழியில், சாதி, மத பிற்போக்கு சக்திகளை மதிநுட்பத்துடன் கையாளும்” என்று தெரிவித்துள்ளார்.“பகுஜன் சமாஜ் கட்சி இயக்க நிறுவனர் கன்சிராமின் 13-ஆவது நினைவுநாளன்று அவருக்கு பகுஜன் சமாஜ் கட்சி அஞ்சலியை செலுத்துகிறது. புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் போராடியவர் கன்சிராம். சாதி மற்றும் குறுகிய சக்திகள், இன்றும்தொடரும் சாம, பேத, தான, தண்ட இயக்கங்களுக்கு சவாலாக இருந்தவர். இதற்கு இன்றும் சரியான உதாரணமாக இருப்பது உத்தரப் பிரதேசம். இங்குதான் இன்றும் சாதி,மத சக்திகள் கடுமையாக செயல்படுகின்றன. இவற்றை மிகவும் மதிநுட்பத்துடன் கையாண்டு, அவரது கனவுகள் நிறைவேற்றப்படும்” என்று மாயாவதி கூறியுள்ளார்.

;