தேசம்

img

‘11 பேர் கொன்றார்கள் என்பதற்கு ஆதாரமில்லை’.... தப்ரேஸ் இறப்புக்கு மன உளைச்சலே காரணம்!

ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் தப்ரேஸ் அன்சாரி (24). இவர் கடந்த ஜூன் 18-ஆம்தேதி தனது நண்பர்களுடன் ஜாம்ஷெட்பூரில் இருந்து கர்சவான்பகுதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் வந்துகொண்டிருக்கும் போது தப்ரேஸ் அன்சாரியை 11 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து ஜெய் ஸ்ரீராம் கூறுமாறு, கடுமையாகத் தாக்கியது. சுமார் 7 மணி நேரம், விளக்குக் கம்பத்தில் கட்டிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், இளைஞர் தப்ரேஸ் ரத்தம் சொட்டச்சொட்ட குற்றுயிரும், குறையுயிருமாக ஆனார். தலையில் விழுந்த பலமான அடியால், கோமா நிலைக்குப் போனார்.

பலமணி நேரத்திற்குப் பின், போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, ஜூன் 22-ஆம் தேதி தப்ரேஸ் அன்சாரி இறந்து போனார். அன்சாரி மீது 11 பேர் கும்பல் நடத்திய கொடூரமான தாக்குதல் வீடியோவாக வெளியாகி, நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அழுத்தம் தாங்க முடியாமல் பிரதமர் மோடியே இச்சம்பவத்தை கண்டிக்க வேண்டிய சூழல் ஏற் பட்டது.இந்நிலையில்தான், அன்சாரிக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டு உடற் கூராய்விலும் அவர் ‘மாரடைப்பால் உயிரிழந்தார்’ மருத்துவ அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இது, அன்சாரி குடும்பத்தினரையும், மனித உரிமை ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.“அன்சாரி மாரடைப்பால் உயிரிழந்தார் என அறிந்ததும் அதை உறுதிப்படுத்திக்கொள்ள மூத்த ஆய்வாளர்களிடம் இரண்டாவது கருத்தைக் கேட்டோம். அவர்களும், ‘மன உளைச்சலால் ஏற்பட்ட மாரடைப்பால்தான் அன்சாரி இறந்தார்’ என்பதை உறுதி செய் துள்ளனர்.மேலும், குற்றம்சாட்டப்பட்ட 11 பேர்தான் அன்சாரியைக் கொன் றார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மருத்துவ அறிக்கையும் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்றே தெரிவித்துள்ளது” என்று ஷாஜகான்பூர் மூத்த காவல்துறை அதிகாரி கார்த்திக் வெகு இயல்பாக கூறியுள்ளார்.

;