தேசம்

img

ஜார்க்கண்ட் பாஜக கூட்டணி உடைந்தது!

ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் பாஜக ஆட்சிநடைபெற்று வரும் நிலையில், அங்கு, மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு, நவம்பர் 30, டிசம்பர் 7, 12, 16, 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக தேர்தல்அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், பாஜக, ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியு), ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி (எல்ஜேபி) உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும் உருவெடுத்தன.இந்நிலையில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறியால் பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆளுக்கொரு திசைக்கு பிரிந்துள்ளன.ஜார்க்கண்ட் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக ஐக்கிய ஜனதாதளம் முன்பே அறிவித்து விட்ட நிலையில்,  தற்போது ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி, ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் ஆகியவையும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளன. லோக் ஜனசக்தி50 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், மாணவர் யூனியன் 12 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

;