தேசம்

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

சித்துவுக்கு புதிய பதவி
அமிர்தசரஸ்:

பஞ்சாப் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தநவ்ஜோத் சிங் சித்து,காங்கிரஸ் கட்சியின் தில்லிமாநிலத் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தில்லி மாநிலத் தலைவராக இருந்துவந்த  ஷீலா தீட்சித் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு சித்து நியமிக்கப்படுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹெக்டே தேர்வு
பெங்களூரு:

கர்நாடகத்தில், எடியூரப்பா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து, சபாநாயகர் ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய் தார். இதையடுத்து, கர்நாடக சபாநாயகர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ விஸ்வேஸ்வர் ஹெக்டே செவ்வாயன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், புதனன்று விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி முறைப்படி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எம்எல்ஏக்கள் 4 பேர் ஓட்டம்
மும்பை:

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை (என்சிபி) சேர்ந்த 3 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரும் செவ்வாயன்று தத்தமது கட்சிகளிலிருந்து விலகினர். எம்எல்ஏ பதவிகளையும் ராஜினாமா செய்தனர்.இந்நிலையில், பதவி விலகிய 4 பேரும் புதனன்றுமுதல்வர் தேவேந்திர பட்னவீஸ் முன்னிலையில்பாஜக-வில் இணைந்துள் ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில், 2019-ஆம் ஆண்டின் இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத் தக்கது.

;