தேசம்

img

பிஎம்சி வங்கியில் ரூ.2500 கோடி மோசடி... பாஜக முன்னாள் எம்எல்ஏ மகன் கைது!

மும்பை:
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி மோசடி தொடர்பாக, பாஜக முன்னாள் எம்எல்ஏவின் மகன் ரஜ்நீத் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.பிஎம்சி கூட்டுறவு வங்கியில், வராக்கடன் பெயரில், சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பது சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. வங்கியின் இயக்குநர்களாக பதவி வகித்த பாஜகவினரே முறைகேடுகளுக்கு காரணம் என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டது.இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்களில், முலுந்த் தொகுதியிலிருந்து நான்குமுறை எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக முன்னாள் எம்எல்ஏசர்தார் தாராசிங்கின் மகன் ரஜ்நீத் சிங்என்பவர் முக்கியமானவர் ஆவார். ஆனால், இதுவரை கைது செய்யப்படாமலேயே இருந்து வந்தார். கடந்த வாரம்,வங்கியின் கணக்காளர்களான ஜயேஷ்சங்கானி, கேத்தன் லக்தாவா ஆகியோர் கைது செய்யப்பட்டபோதுகூட ரஜ்நீத் சிங் கைது செய்யப்படவில்லை. இது சர்ச்சைகளை ஏற்படுத்தி வந் தது.இந்நிலையில், ரஜ்நீத் சிங் தற்போதுகைது செய்யப்பட்டுள்ளார்.

;