தேசம்

img

மதத்தலைவர்களே சமூகத்தில் வெறுப்பை விதைக்கிறார்கள்...

மும்பை:
மதத் தலைவர்கள்தான் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக சமூகத்தில் வெறுப்பை பரப்புகிறார்கள் என்று ‘இராமாயணம்’ தொலைக் காட்சித் தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் (Arun Govil) கூறியுள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளில், மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்ற காரணத்தைச் சொல்லி, மனிதர்கள் அடித்துக்கொல்லப்படுவது பற்றி, அருண் கோவிலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போதுதான் இந்த கருத்தை அவர் கூறியுள்ளார்.“தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக மதத் தலைவர்கள்தான் மதத்தை ஒரு ஆயுதமாக பயன் படுத்துகின்றனர்; ஆனால், மதங்கள்எந்த வெறுப்பையும் விதைப்பதில்லை” என்று அருண் கோவில் தெரிவித்துள்ளார்.“தான் தற்போது நடித்துவரும் தொலைக்காட்சித் தொடர்கள்கூட, மனிதர்களின் உளப்பாங்கு, மானுடப் பண்புகள் மற்றும் நடத்தை மேம்பாடு ஆகிய அம்சங்களை வலியுறுத்துவதுதான்” என்றும் குறிப் பிட்டுள்ளார்.அருண்கோவில் ராமர் வேடம்மட்டுமன்றி, ஷிவ் மகா புராணில், சிவன் வேடமும், விக்ரம் வேடமும்பூண்டு ரசிகர்களைக் கவர்ந்தவர்ஆவார். பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

;