தேசம்

img

பாக். மீதான பற்றுக்குத்தான் ‘பத்ம விபூஷண்’ தந்தீர்களா?

மும்பை:
பாகிஸ்தான் மீது அதிக பற்றுடன் இருப்பதாக, தன் மீது குற்றச்சாட்டு வைக்கும் பாஜக, பின்னர் எதற்காக தனக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியது? என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் நடை பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசினார்.அப்போது, “இந்தியாவை விட பாகிஸ்தானை அதிகம் நேசிப்பதற்கான காரணத்தை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரியப்படுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.இதற்குத்தான் சரத் பவார் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.“பாகிஸ்தான் மீது அதிக பற்றுடன் இருப்பதாகக் கூறும் மத்திய அரசு, பின்னர் எதற்காக எனக்கு, 2017-ஆம்ஆண்டு பத்ம விபூஷண் விருதுவழங்கியது? நாட்டின் நலனுக்கு சேவை ஆற்றியதால்தானே, நாட்டின் இரண் டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது தந்தார்கள்.. இவ்வாறு, ஒரு கையில் விருதை கொடுத்து விட்டு மற்றொரு புறம் களங்கத்தை ஏற்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?” என்று சரத் பவார் கேட்டுள்ளார்.

;