ஞாயிறு, ஆகஸ்ட் 9, 2020

தேசம்

img

களைகட்டும் மகாராஷ்டிர சட்டப்பேரவை.... பாஜக - சிவசேனா எம்எல்ஏக்கள் கைகலப்பு!

மும்பை:
உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான கோரிக்கை பேனர்களுடன் வந்த பாஜக எம்எல்ஏ-க்களும், சிவசேனா எம்எல்ஏ-க்களும் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.பருவம் தவறி பெய்த மழையால், விவசாயிகள் பாதிக்கப் பட்டு இருப்பதாகவும், அவர் களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அண்மையில் சிவசேனா கட்சி, தனது கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’வில் குறிப்பிட்டிருந்தது.தற்போது சிவசேனா கட்சியே ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையில்,  அக்கட்சி வைத்த கோரிக்கைகளையே பேனர்களாக மாற்றி,பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு எடுத்து வந்தனர். பாஜகதலைவர் தேவேந்திர பட்னாவிஸ்தலைமையில் அவர்கள், முதல் வர் உத்தவ் தாக்கரேயிடம் அந்தப்பேனரை காட்டி முழக்கமிட்டனர்.அப்போது, சிவசேனா உறுப்பினர்கள் அந்தப் பேனரை பறிக்க முயன்றதையொட்டி, இரண்டு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் சட்டப்பேரவைக் கூட்டம் 30 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னரும் கூச்சல் நிற்காததால், நாள் முழுவதும் சட்டப் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

;