தேசம்

img

பாஜக கட்டுப்பாட்டில் குடியரசுத் தலைவர் இருக்கிறாரா?

மும்பை:
பாஜக கட்டுப்பாட்டில் குடியரசுத் தலைவர்  இருக்கிறாரா? அல்லது அவரது முத்திரை பாஜக அலுவலகத்தில் உள்ளதா? என்று சிவசேனா காட்டமானகேள்வியை எழுப்பியுள்ளது.மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும்ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. ஆட்சியதிகாரத்தில் சமபங்கு வழங்க வேண்டும்என்றும் முக்கியமாக முதல்வர்  பதவி வேண்டும் என்ற நிலைபாட்டில் சிவசேனா உறுதியாக உள்ளது. ஆனால் பாஜக இதற்கு இணங்கவில்லை.இதனால்இருகட்சிகளிடையே மோதல் முற்றி வருகிறது. சிவசேனா கட்சியின் மூத்ததலைவர் சஞ்சய் ராவத் எம்.பி., மும்பையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆட்சியில் 50:50பார்முலா (சம பங்கு) அடிப்படையில்தான் மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர். இந்த திட்டம் மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளது. சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வராக  இருப்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை சஞ்சய் ராவத் சந்தித்துப்  பேசினார். 

இந்த நிலையில் பாஜகமூத்த தலைவரும், நிதியமைச்சராக இருந்தவருமான சுதீர்முங்கண்டிவார் தொலைக்காட்சிக்கு  அளித்த பேட்டியில், விரைவில் கூட்டணி அரசு அமையும். ஒருவேளை வழங்கப்பட்ட காலத்துக்குள் புதிய அரசு அமையவில்லை என்றால், விதிமுறைகளின்படி குடியரசுத் தலைவர்  தலையிடுவார். அவர்குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவார்” என தெரிவித்தார்.இதனை சிவசேனாவின்  “சாம்னா” பத்திரிகையின் தலையங்கத்தில் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளது. ‘குடியரசுத் தலைவர் உங்கள் பாக்கெட்டில் இருக்கிறாரா? மராட்டியத்தை அவமதிப்பதா” என்ற தலைப்பில்வெளிவந்துள்ள கட்டுரையில், உங்கள் (பாஜக) கட்டுப்பாட்டின் கீழ் குடியரசுத் தலைவர் இருக்கிறாரா? அல்லது குடியரசுத் தலைவரின் முத்திரை பாஜக அலுவலகத்தில் உள்ளதா? இது மாநிலத்தில் அரசாங்கத்தை உருவாக்க முடியாவிட்டால், மராட்டியத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்த முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளது.

;