திங்கள், ஆகஸ்ட் 3, 2020

தேசம்

img

கொரோனா நெருக்கடியிலும் பாஜக அரசியல் செய்கிறது!

மும்பை:
மகாராஷ்டிராவில் நிசர்கா புயலால் பாதிக்கப்பட்ட ராய்காட் மற்றும் கொங்கன் பகுதிகளை மாநில சிவசேனா கூட்டணி அரசில்அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத்பவார் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பார்வையிட்டார். இவ்விஷயத்தில் சரத்பவாரை பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் விமர்சித்தார். ‘சரத்பவார் திடீரென எப்படி விழித்தெழுந்தார்?’ என கேள்வி எழுப்பினார்.இந்நிலையில், சந்திரகாந்த் பாட்டீலுக்கு சிவசேனாவின் நாளேடான சாம்னா, அதன் தலையங்கத்தில் பதிலடி கொடுத்துள்ளது.

“சரத்பவார் எப்போதுமே விழிப்புடன்தான் இருக்கிறார். அதனால்தான் அவர் தனது அரசியல் நேரத்தை எப்போதும் சரியாக பெறுகிறார். அதேபோல கொரோனா வைரஸ் மற்றும் நிசர்கா சூறாவளி நெருக்கடி காலங்களில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசும் விழிப்புடன் இருக்கிறது. ஆனால் மத்தியஅரசு விழிப்புடன் இருக்கிறதா? என்பதுதான் கேள்வி” என்றுகுறிப்பிட்டுள்ள சாம்னா, “ஆம்பன் சூறாவளி சேதத்தைமதிப்பிடுவதற்காக பிரதமர்நரேந்திர மோடி மேற்கு வங்கத்துக்கு மத்தியக் குழுவை 
அனுப்பினார். அது நல்லது; அதேநேரம் நிசர்கா புய லால் பாதிக்கப்பட்ட மகாராஷ் டிரத்திற்கு ஏன் மத்தியக் குழுவை அனுப்பவில்லை? இதுபற்றி சந்திரகாந்த் பாட்டீல் மத்திய அரசை கேள்வி கேட்டாரா?” என வினா எழுப்பியுள்ளது.“மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்குவதாலேயே அங்கு மத்திய அரசு உதவிக்கரம் நீட்டுகிறது; இவ்வாறு கொரோனா வைரஸ் பரவல், நிசர்கா புயல் பாதிப்பு நெருக்கடியிலும், பாஜகஅரசியல் செய்வது பரிதாபகர மானது” என்றும் சிவசேனா சாடியுள்ளது.

;