தேசம்

img

சிவசேனா கோரிக்கையை பாஜக பரிசீலிக்க வேண்டும்...

மும்பை:
சிவசேனா கோரிக்கையை பாஜக தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரும், பாஜக கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான இந்திய குடியரசுக் கட்சியின் (RBI) தலைவருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத் தில் புதிய அரசை அமைப்பதில், பாஜக - சிவசேனா இடையே இழுபறி நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில்,இவ்வாறு அவர் கூறியுள்ளார்.“மகாராஷ்டிராவில் உள்ள பாஜக-சிவசேனா கூட்டணிக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணைகிடைத்துள்ளது. சிவசேனாவுக்கு பாஜகவை விட குறைவான இடங்கள் கிடைத்திருக்கும் போதிலும், சிவசேனா இல்லாமல் மாநிலத்தில் பாஜகவால் அரசாங்கத்தை உருவாக்க முடியாது என்னும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, இரண்டரை ஆண்டுகள் அரசாங்கத்தை நடத்த சிவசேனாவின் முன்மொழிவை பாஜக பரிசீலிக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏற்பட்டுள்ளது. சிவசேனாவின் இந்த முன்மொழிவுக்கு பாஜக ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், மையத்திலும் மாநிலத்திலும் அதிக அமைச்சர் பதவிகளையாவது வழங்க வேண் டும்” என்று அத்வாலே குறிப்பிட்டுள்ளார்.

;