தேசம்

img

மகாராஷ்டிர மாநிலத்திலும் ம.பி. பாணியில் பாஜக ஆட்சி... மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சொல்கிறார்

மும்பை:
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரசின் இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவை தனது வலைக்குள் கொண்டு வந்த பாஜக, அவர் மூலமாக காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்கும் வேலையில் இறங்கியுள்ளது. பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப்பிறகு, காங்கிரசிலிருந்து விலகுவதாக ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார். அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள், 20 பேர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். 

இதனால், கர்நாடக மாநில பாணியில், விரைவில் மத்தியப்பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து, பாஜக ஆட்சியமைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், “மத்தியப் பிரதேசத்தில் எப்படி ஆட்சியைக் கவிழ்த்து,
பாஜக ஆட்சியமைக்கிறதோ அதேபோலமகாராஷ்டிராவிலும் பாஜக ஆட்சி அமைக்க முடியும்” என்று மத்திய அமைச்சரும், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும்இந்திய குடியரசுக் கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே புதிய பர
பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.மகாராஷ்டிராவில் ஏராளமான சிவசேனா எம்எல்ஏ-க்கள் தற்போதைய கூட்டணி ஆட்சியால் அதிருப்தியில் உள்ளனர்; எனவே, மகாராஷ்டிர அரசியலிலும் பூகம்பம் வெடிக்கும் என்று அவர்கூறியுள்ளார்.

;