தேசம்

img

அதானி நிறுவனத்தின் மின்கட்டண கொள்ளை...

மும்பை:
மும்பையில் மின்விநியோகத்தைக் கையில் வைத்திருக்கும் தனியார் நிறுவனமான அதானி எலக்ரிசிட்டி, தனது இஷ்டத்திற்கு மின்கட்டணத்தை நிர்ணயித்து பெரும் கொள்ளையில் இறங்கியுள்ளது. தமிழில் ‘கோ’ படத்தில் நடித்தவரும், தற்போது மும்பையில் வசிப்பவருமான கார்த்திகா, இதுதொடர்பாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். “அதானி மின்சார (Adani Electricity) நிறுவனத்தினர், என்ன விதமான மோசடியை மும்பையில் செய்து கொண்டிருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அவரைத் தொடர்ந்து, நடிகை ஷ்ரத்தா தாஸ், தனக்கும் ரூ. 26 ஆயிரம் பில் வந்திருக்கிறது, என்றும்; நடிகைடாப்ஸி தனக்கு ரூ. 36 ஆயிரம்ரூபாய் பில் வந்திருப்பதாக வும் அதிர்ச்சிகளை வெளியிட்டனர். அதானி நிறுவனம் இதற்குஉரிய பதில் அளித்தாக வேண்டும் என்றும் அவர்  குறிப்பிட்டனர்.இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஸி,தனக்கும் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். “இது என்ன புது மின் கட்டணம்? கடந்த மாதம் ரூ. 6 ஆயிரம் கட்டினேன். இப்போது 50 ஆயிரமா? எப்படிவந்தது இந்த கட்டண உயர்வு? எங்களுக்கு விளக்குங்கள்” என்று அதானி மின் குழுமத்துக்கு டேக் செய்து டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.இவர், தமிழில் பா. ரஞ்சித் இயக்கிய “காலா” படத்தில் ரஜினியின் காதலியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.திரைப்பட இயக்குநர் பிஜோய் நம்பியாரும் தனக்கு மின் கட்டணம் மூன்று மடங்கு அதிகமாகி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

;