தேசம்

img

வெளிநாட்டவருக்கு ஆதார் பாஜக தலைவர்கள் சிக்கினர்

மிட்னாப்பூர்:
மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி நகரில், சட்டவிரோதக் குடியேற்றம் தொடர்பாக, இசை விடுதிஒன்றை போலீசார் சோதனை யிட்டுள்ளனர். இசை விடுதியின் முதலாளி தரம் பாஸ்வான், ஊழியர்சவுமன் பாயன் மற்றும் அவரது மனைவி புஷ்பா ராய் ஆகியோரிடம் விசாரணையும் நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில், புஷ்பா ராய் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர் மிட்னாப்பூரைச் சேர்ந்த பாஜக தலைவர் ரவிகுமார் மூலமாக, முறைகேடான வகையில் ஆதார் அட்டை பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேற்குவங்க பாஜக தலைவரான திலீப் கோஷ்- சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, அவரிடமிருந்து புஷ்பா ராய்க்கு ரவிகுமார் இருப்பிடச் சான்றிதழ் பெற்றுத் தந்துள்ளார். அதனை வைத்து புஷ்பா ராய் ஆதார் அட்டை பெற்றுள்ளார். புஷ்பாராய்க்கு இருப்பிடச் சான்றிதழ் தந்ததிலீப் கோஷ்-தான் மாட்டுப்பாலில் தங்கம் இருப்பதாக கூறியவர். தற்போது எம்.பி.யாக இருக்கிறார்.இதையடுத்து, பாஜக-வின்விளையாட்டுப் பிரிவு செயலாள ரான ரவிகுமாரை போலீசார் கைதுசெய்துள்ளனர். திலீப் கோஷ் மீதும் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதற்கும் தேசிய குடிமைப் பதிவேட்டைக் கொண்டுவரப்போவதாக பாஜக தலைமைகூறிவரும் நிலையில், அக்கட்சி யைச் சேர்ந்த தலைவர்களே வெளிநாட்டவருக்கு போலியாக ஆதார் அட்டை பெற்றுத் தந்திருப்பது, தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

;