தேசம்

img

பப்ஜி விளையாட்டு ஆர்வத்தில் கெமிக்கல் குடித்தவர்  உயிரிழப்பு

மத்தியபிரதேசத்தில் பப்ஜி விளையாடிய ஆர்வத்தில் கெமிக்கலை குடித்தவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் சவுராப்யாதவ் தனது நண்பர் சந்தோஷ் சர்மாவுடன் குவாலியரில் இருந்து ஆக்ராவுக்கு பயணம் செய்துகொண்டிருந்தார். பயணத்தின் போது பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த ஆர்வத்தில் நண்பர் சந்தோஷ் சர்மா வைத்திருந்த நகை சுத்தம் செய்ய பயன்படுத்தும் கெமிக்கலை தவறுதலாக குடித்துவிட்டார். இதையடுத்து மயக்கமடைந்த அவர் அடுத்த நிலையத்திற்கு செல்வதற்கு முன்பே பரிதாபமாக இறந்து விட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம்  குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

;