தேசம்

img

அரசியல் சாசனத்தை பாதுகாத்திட மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி மதுரையில் பொதுக்கூட்டம்

மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும் இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாத்திடவும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர்-புறநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் பிப்ரவரி 16 ஞாயிறன்று அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற வருகை தந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வரவேற்ற தோழர்களைப் பார்த்து கையசைக்கிறார். இக்கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், மதுக்கூர் இராமலிங்கம், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்கள், அனைத்து சமயத் தலைவர்கள், பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

;