திங்கள், ஆகஸ்ட் 3, 2020

தேசம்

img

சொப்னா தப்பியது பாஜக உதவியுடன்தான்... கர்நாடக காங்கிரஸ் குற்றச்சாட்டு

மங்களூரு:
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் பாஜகவின் கண்ணுக்கு தெரியாத கரங்கள் செயல்பட்டுள்ளது என கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பி.வி.மோகனன் கூறியுள்ளார். குற்றவாளிகள் கர்நாடகத்துக்கு தப்பியதில் கேரள காவல்துறையை அல்ல கர்நாடக காவல்துறையின் பங்கு பற்றி தனியாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் கர்நாடகாவில், அனைத்து மாநில எல்லைகளிலும் கடும் போலீஸ் சோதனைகள் உள்ளன. என்ஐஏ விசாரித்துவரும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் நாயர் மற்றும் சொப்னா சுரேஷ் ஆகியோர் வலுவான காவல்துறை சோதனையை முறியடித்து கர்நாடகாவிற்குள் நுழைந்தது எப்படி? குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் நாயர் பாஜக செயற்பாட்டாளர். எல்லையை கடக்க கர்நாடக பாஜக அரசாங்கத்தில் ஒரு செல்வாக்கு மிக்க நபரின் உதவியை அவர்கள் பெற்றுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமிழகம் அல்லது பிற மாநிலங்களுக்குச் செல்லாமல், பாஜக செல்வாக்குமிக்க பெங்களூருக்குச் செல்ல இதுவே காரணம் என்றும் மோகனன் கூறினார்.

;