தேசம்

img

கொரோனா தொற்றால் மகாராஷ்டிராவின் முதல் பெண் தேர்தல் அதிகாரி உயிரிழப்பு

மகாராஷ்டிர முதல் பெண் தேர்தல் அதிகாரி கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் நீலா சத்தியநாராயண் என்ற பெண் முதல் பெண் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர். அவருக்கு வயது 72. கடந்த 1972ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தவர் பணி ஓய்வுக்கு பின் மாநிலத்தில் கூடுதல் தலைமைத் தேர்தல் செயலாளராக நியமிக்கப்பட்டவர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

;