தேசம்

img

கர்நாடக பாஜக ஆட்சியில் ‘திருடன் கையில் சாவி?’ காடுகளை அழித்தவருக்கு வனத்துறை அமைச்சர் பதவி...

பெங்களூரு:
பெல்லாரி ஆனந்த் சிங் என்பவர், கர்நாடக மாநில ‘காடுகள்  மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக பதவியேற்று இருப்பது, அங்குள்ள பொதுமக்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2008 முதல் 2013ஆம்ஆண்டு வரை,பாஜக ஆட்சியின் போது, காடு களை அழித்தது; சட்டவிரோத சுரங்கங்கள் மூலம் சுற்றுச்சூழலைநாசமாக்கியது உள்ளிட்ட குற்றங் களுக்காக, 15-க்கும் மேற்பட்ட வழக்குகளை எதிர்கொண்டு வருபவர் பெல்லாரி ஆனந்த்சிங். ஏமாற்று, திருட்டு, சதித் திட்டம் தீட்டுதல், சட்டத்திற்கு புறம்பாக காடுகளில் நுழைதல் மற்றும் போர்ஜரி போன்ற பல்வேறு பிரிவுகளிலும், இவர் மீது வழக்குகள் உள்ளன. இதில் 11 வழக்குகளை சிறப்புக்குழு விசாரணை நடத்தியது. கைதும் நடவடிக்கையும் மேற்கொண்டது. 3 வழக்குகளில் மத்திய புலனாய்வுக் கழகமும் (சிபிஐ) ஆனந்த் சிங்கை கைது செய்துள்ளது. அவர் தற்போதும் ஜாமீனில்தான் வெளியே உலா வந்து கொண்டிருக்கிறார்.‘சுரங்க மாபியா’ ஜனார்த்த னன் ரெட்டியுடன் சேர்ந்து, கர்நாடக கருவூலத்திற்கு ரூ. 200 கோடி வரை இழப்பு ஏற்படுத்திய வழக்கிலும், பெல்லாரி ஆனந்த் சிங் முக்கியக் குற்றவாளி ஆவார்.இவ்வளவு ‘சிறப்பு’ கொண்டஒருவரை, அதிலும், காடு களையும், கனிமங்களையும் வெட்டி இயற்கையை அழிப்பவரை, அதே துறைக்கு அமைச்சர் ஆக்கியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி, உணவு மற்றும் பொது விநியோகத்துறை துறையின் அமைச்சராகத்தான் பெல்லாரிஆனந்த் சிங், நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால், உணவுத்துறை யில் பணியாற்ற விருப்பம் இல்லை; வனத்துறைதான் வேண்டும் என்று பெல்லாரி ஆனந்த் சிங் விரும்பி கேட்டுக் கொண்டதால், மறுநாளே அவர் கேட்ட துறையை எடியூரப்பா ஒதுக்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

;