தேசம்

img

ரபேலுக்கு நடத்திய ஆயுதபூஜை ஒரு நகைச்சுவை நாடகம்

பெங்களூரு:
பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் போர்விமானம், அக்டோபர் 8-ஆம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம்ஒப்படைக்கப்பட்டது. அப்போது, அந்த போர் விமானத்திற்கு சந்தனப் பொட்டு வைத்து, முன் பகுதியில்தேங்காய், பூக்கள் வைத்து, சிங்சாஸ்த்ர பூஜை நடத்திய ராஜ்நாத் சிங், விமானத்தின் மீது, ஓம் என்று இந்தியில் எழுதி, திருஷ்டி கயிறு கட்டி அதன் பின்னரே விமானத்தைப் பெற்றுக் கொண்டார்.அத்துடன் டயருக்கு அடியில் எலுமிச்சைபழங்களை வைத்து நசுக்கிய பின்னரே, விமானத்தில் ஏறிப் பயணம் செய்தார்.மதச்சார்பற்ற நாட்டின் அமைச்சர் ஒருவர் இவ்வாறு மதச்சடங்குகளை செய்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், ராஜ்நாத் சிங் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “இது ஒரு நகைச்சுவை நாடகம்” என்று சாடியுள்ளார். “ரபேல் விமானத்தை வைத்து மத்திய அரசு நாடகம் நடத்துகிறது. இதுபோன்ற காமெடிகள் தேவையில்லை. போபர்ஸ் பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்கள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்டன. ஆனால் அமைச்சர்களே அவற்றை நேரில் சென்று வாங்கியதில்லை. இதுபோன்று பூஜைகளும் செய்ததில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

;