தேசம்

img

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சிவாஜி ராவுக்கு கொரோனா தொற்று... 

புனே
நாட்டின் கொரோனா மையமாக உள்ள மகாராஷ்டிராவில் இதுவரை 2.75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், 1.52 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில் 1985 -1986 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அம்மாநில முதல்வராக இருந்த சிவாஜி ராவ் பாட்டீல் நிலாங்கேக்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

லத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் இவரை புனே நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 88 வயதாகும் சிவாஜி ராவ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஒரு வருடம் மட்டுமே முதல்வராக இருந்துள்ளார். மகளின் மருத்துவ தேர்வு மதிப்பெண்களில் திருத்தம் செய்தது தொடர்பாக கூறி மும்பை உயர்நீதிமன்றம் அவருக்கு கண்டனம் தெரிவித்தது. இதனால் சிவாஜி தனது பதுவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;